‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சவுதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் விலையை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

இந்தியா மற்றும் உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடான வருடாந்திர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா நிர்பந்திப்பது, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். 


Advertisement

இந்தியா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகளில் பண வீக்கம் அதிகரிப்பதாகவும், பட்ஜெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். கடந்த 4 ஆண்டுகள் உயர்த்தப்பட்ட விலையால் சர்வதேச அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சவுதி அரேபியாவின் எண்ணெய் வள அமைச்சர் காலித் அல் ஃபாலி, இந்தியாவின் பாதிப்புகளை உணர்வதாக தெரிவித்தார். 

இந்தியா போன்ற அதிக நுகர்வு தேவை உள்ள நாடுகள் பாதிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் எனவும் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கச்சா எண்ணெய் நிலவரம் குறித்து விவாத்தினர்.


Advertisement

அண்மைக்காலமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரியை மத்திய அரசு, லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைத்து அறிவித்திருந்தது. ஆனாலும் பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து. குறைக்கப்பட்டதற்கு முன்னர் இருந்தது போலவே, பெட்ரோல் லிட்டர் ரூ.85.99 மற்றும் டீசல் லிட்டர் ரூ.79.80 (சென்னை) என விற்பனையாகிறது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement