மலையாள ஹீரோவை கத்தியால் குத்த ஓடி வந்த முதியவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
பிரபல மலையாள ஹீரோ குஞ்சாக்கோ போபன். இவர் இப்போது லால் ஜோஸ் இயக்கும் ’தட்டிபுரத்து அச்சுதன்’ என்ற படத்தில் இப்போது நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு எர்ணாகுளம் தெற்கு ரயில்வே ஸ்டேஷன் வந்தார். கண்ணூர் செல்லும் மாவேலி ரயிலுக்காகக் காத்திருந்தார். அப்போது முதியவர் ஒருவர் கத்தியை காட்டி, திட்டிக்கொண்டே குஞ்சாக்கோ போபனை நோக்கி ஓடி வந்தார். குத்தப் போவதாக மிரட்டினார்.
இதையடுத்து அந்தப் பகுதி பரபரப்பானது. அருகில் இருந்த ரயில்வே போலீஸார் அந்த முதியவரை பிடித்து விசாரித்தனர். அவர் தொப்பும்படியை சேர்ந்த ஸ்டேன்லி ஜோசப் (வயது 76) என்பது தெரிய வந்தது. கஞ்சாக்கோ கொடுத்த புகாரையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
‘அவருக்கு குஞ்சாக்கோ யார் என்பது தெரியவில்லை. எதற்காக அவரை குத்தச் சென்றார் என்பது பற்றி விசாரித்து வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!