டூ வீலரின் பின் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை காவல்துறை அறிவுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.


Advertisement

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைக்கவசம் குறித்து போக்குவரத்துக் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதையும், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Advertisement

இருப்பினும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், விபத்துகளின்போது தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement