“கியர் பைக் ஓட்டத்தெரியாது” - 23 டிவிஎஸ் எக்ஸ்.எல் திருடியவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருத்தணி அருகே 23 டிவிஎஸ் எக்ஸ்.எல் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டி.வி.எஸ். எக்ஸ்.எல். இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் வாகனங்களுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆவணங்கள் குறித்து காவல்துறையினர் கேட்டபோது, ஜமால் என்பவரிடமிருந்து வண்டியை வாங்கியதாகவும், அவர் ஆவணங்கள் எதையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவலின்படி, ஆந்திர மாநிலம் நகரியைச் சேர்ந்த ஜமாலை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

அப்போது சில திடுக்கிடும் தகவல்களை ஜமால் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். கடந்த 6 வருடங்களாக டிவிஎஸ் எக்ஸ்.எல் இருசக்கர வாகனத்தை திருடுவதை அவர் வேலையாக செய்து வந்துள்ளார். திருடிய வாகனங்களுக்கு அவரே வேறு நம்பர் பிளேட்டில், புதிய நம்பரை பெயிண்ட் அடித்து விற்றுள்ளார். யாராவது இருசக்கர வாகனம் விற்பனைக்கு இருக்கிறதா? என்று கேட்கும் தருணங்களில் மட்டும் திருடியுள்ளார். அதிலும் டிவிஎஸ் எக்ஸ்.எல் மட்டும் திருடியுள்ளார். அது ஏன்? என காவல்துறையினர் கேட்டபோது, அது தான் திருடுவதற்கு எளிதாக இருப்பதாகவும், தனக்கு கியர் பைக் ஓட்டத்தெரியாது எனவும் கூறியுள்ளார். 


Advertisement

இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் திருடி விற்ற 23 மூன்று வாகனங்களை வாங்கியவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்களிடம் அந்த வாகனங்களை ஒப்படைக்க உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் நூதன திருட்டு, மோசடி திருட்டு என பல வகைகளில் திருடுகள் நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற விசித்திர திருடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் சில காவலர்கள் தெரிவித்துள்ளனர். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement