கருணாநிதி மறைவு : அமெரிக்கா இரங்கல்

America-Mourning-for-Kalaingar-Karunanidhi

கருணாநிதி மறைவிற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது.


Advertisement

திமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது. இன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்தியாவின் அமெரிக்க தூதரகம் சார்பில், கென் ஜஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கும், முத்துவேல் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் தனது இதயத்திலிருந்து இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். அவர் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கு ஆற்றிய சேவைகள் மிகப்பெரியது என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement