நிவாரண உதவி அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவை கார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவித்தார்.


Advertisement

கோயம்புத்தூரில் கார் மோதி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில், மதுக்கரை வட்டம், சுந்தராபுரத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்த கார் மோதியதில் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது அறிந்து துயரம் அடைந்ததாகக் கூறியுள்ளார். ஆறு பேரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள முதல்வர், காயடைந்த மூன்று பேருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 
 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement