மதுரையில் உள்ள கோயில் ஒன்றில் பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திமுக அரசு 2006 ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை அனுமதிக்கும் அரசாணையை வெளியிட்டது. பயிற்சி நிலையங்களில் படித்து முடித்த 206 பேருக்கு மடாதிபதிகளை வைத்து தீட்சைகளும் வழங்கப்பட்டன. ஆனால், திமுக அரசின் அந்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால், பயிற்சி பெற்றவர்கள் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படாமலே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மதுரையில் உள்ள கோயிலில் 206 பேரில் ஒருவர் மட்டும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராமணர் அல்லாத ஒருவர், தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் அர்ச்சகர் பணிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை. கடந்த 5 மாதங்களாக அவர் அர்ச்சகர் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘பல்வேறு போராட்டங்களை கடந்து மதுரையில் உள்ள கோயிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய திமுக தலைவர் கருணாநிதிக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி’ எனக் கூறியுள்ளார். இது திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
Loading More post
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?