JUST IN
  • BREAKING-NEWS ‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் இருக்காது..! - சுப்பிரமணியன் சுவாமி
  • BREAKING-NEWS ‌கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‌இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்
  • BREAKING-NEWS ‌சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS ‌’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு
  • BREAKING-NEWS ‌இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

கபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரில் இந்திய அணியும், ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியும் வென்றது. இதனையடுத்து, இருஅணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக 4 நாட்கள் நடைபெறும் பயிற்சி ஆட்டம் வரும் ஜூலை 25ம் தேதி முதல் நடக்கிறது.

                   

இந்திய அணி 1932ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 1932 ஜூன் மாதம் லாட்ஸ் மைதானத்தில் தான் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதில் இதுவரை, வடேகர், கபில்தேவ் மற்றும் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி தான் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது. கங்குலி தலைமையிலான அணி 2002ம் ஆண்டு டெஸ்ட் தொடரை டிரா செய்தது. தோனி தலைமையிலான அணி 2014ம் ஆண்டு 1-3 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது. 

                   

வெற்றி:-

வடேகர் - 1971
கபில்தேவ் - 1983
டிராவிட் - 2007

மற்றவை:-

கங்குலி - 2002 (டிரா)
தோனி  - 2014 (தோல்வி 1-3) 

                        

86 ஆண்டுகளில் இந்திய அணி மூன்றாவது முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடுகிறது. கோலி தலைமையிலான இளம் படை பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் அஸ்வின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், வடேகர், கபில்தேவ், டிராவிட் ஆகியோருக்கு அடுத்தபடியாக விராட் கோலி தலையிலான அணியும் வெற்றியை பதிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Advertisement: