“நான் அல்ல அது... புகைப்படத்தை பரப்பாதீர்கள் ” சிக்கலுக்கு உள்ளான கேரள பெண்..!

Neither-Kerala-Church-abuse-victim-nor-a-stock-image-stop-circulating-her-selfie

பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாக கேரளாவை சேர்ந்த மருத்துவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Advertisement

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாதிரியார்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது மனைவி பாதிரியார்களால் மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் முதலில் தேவாலயத்தில்தான் முறையிட்டார். ஆனால் அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் தனது மனைவிக்கு நேர்ந்த துயரம் குறித்து அப்பெண்ணின் கணவர் தனது நண்பருடன் கண்ணீர் மல்க பேசும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதனைக் கொண்டு இந்தச் சம்பவம் அம்பலமானது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பேசும் ஆடியோவுடன் ஒரு பெண்ணின் புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. புகைப்படத்தில் இருப்பவர்தான் பாதிக்கப்பட்ட பெண் என்று பரவலாக செய்தி பரப்பப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் புகைப்படத்தை  பார்த்த மருத்துவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.


Advertisement

இதுகுறித்து பத்தனம்திட்டாவை சேர்ந்த மருத்துவர் அஞ்சு ராமசந்திரன் கூறும்போது, “உண்மையில் கேரளா பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.  கடந்த ஜூன் 25-ம் தேதிதான் என்னுடன் ஏற்கனவே பணியாற்றிய என் தோழி ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோவுடன் புகைப்படம் ஒன்றையும் அனுப்பி வைத்திருப்பதாகவும் அதனை பார்க்கும்படியும் கூறினார். நான் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உண்மையில் அப்போது தான் எனக்கு பாதிரியார்களின் பாலியல் வன்கொடுமை தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக எனது புகைப்படம் பரவிக் கொண்டிருப்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. என்னால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் எனது கணவரும் இதேபோன்று அவருக்கும் அனுப்பியிருந்ததை காட்டினார். அவருக்கும் இது அதிர்ச்சிதான்.

என் புகைப்படம் தவறாக பயன்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. இதுபோன்று ஏற்கனவே பலமுறை நடந்திருக்கிறது. ஏற்கனவே மிகவும் மோசமான வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் என் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் எனது புகைப்படத்தை அடல்ட் நடிகை என்று முகநூலில் பதிவேற்றம் செய்கிறார்கள். எனது புகைப்படம் தவறாக சித்தரிக்கப்படுவது இது 4-வது முறையாகும். முதன்முறை நடந்தது கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். முதலில் ஆபாச தகவலோடு என் புகைப்படம் பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடல்ட் நடிகை என்றார்கள். அதன்பின் பிரங்க் கால்  (Prank call) ஆடியோவுடன் என் புகைப்படம் பகிரப்பட்டது.


Advertisement

நான் ஏற்கனவே போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தேன். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் சில வாட்ஸ் அப் குரூப் அட்மின்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல் என் புகைப்படத்தை ‘அடல்ட் நடிகை ’ என வைத்த சில பேஸ்புக் ஐடியும் ரிப்போர்ட் செய்யப்பட்டன. தற்போது இந்த விவகாரத்தில் போலீசாருக்கு புகார் அளித்ததோடு முதலமைச்சர் அலுவலகத்திற்கும் இதை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். பத்தினம்திட்டா எஸ்.பி இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். என் புகைப்படம் தவறாக முதல் நேரத்தில் பயன்படுத்தப்பட்ட போதே என் முகநூலில் என் புகைப்படத்தை அகற்றிவிட்டேன். இப்போது என் முகநூல் பக்கத்தில் நான் எனது அம்மா மற்றும் கணவருடன் இருக்கும் ஒருசில புகைப்படங்களே இருக்கின்றன. நான் தனியாக இருக்கும் எந்தப் புகைப்படமும் என் முகநூல் பக்கத்தில் இல்லை” எனத் தெரிவித்தார்.

Courtesy: TheNewsMinute

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement