ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 'கொம்புவச்ச சிங்கம்டா' பாடல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் - அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற தலைப்பில் விரைவில் பாடல் ஒன்று வரவிருக்கிறது.


Advertisement

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இதையடுத்து வரும் பொங்கல் பண்டிக்கைக்கு ஜல்லிக்கட்டு நடக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் பேரணி நடத்தினர். இதற்கு ஆதரவாக இயக்குநர் அமீர், கவுதமன் உள்ளிட்ட பல்வேறு திரைத்துறையினரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு பாடல் ஒன்று வரவிருக்கிறது. இந்த அறிவிப்பை ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement