காலா கொண்டாட்டம் இங்கே! - ரஜினி எங்கே?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பிற்கு பிறகு வரும் திரைப்படம் என்பதால், எதிர்பார்ப்பு படம் வெளிவந்துளது. படத்தை காண்பதற்கு அதிகாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குவிந்துள்ளது. ஆடல், பாடல், மேள தாளங்களுடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். படத்தை பார்த்த பல சினிமா நிபுணர்களும் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ரஜினி எங்கே? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Advertisement

காலா வெற்றியை கொண்டாடுவதற்கு முன்னர் தனது அடுத்த படத்தின் சூட்டிங் களத்தில் குதித்துவிட்டார் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது வடக்கு வங்காளத்தின் மலைப்பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக விமானத்தின் மூலம் ரஜினி வடக்கு வங்காளம் சென்றுள்ளார். 


Advertisement

அவருக்கு விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 


Advertisement

அப்போது விமானப் பணிப்பெண் ஒருவர், ரஜினிகாந்திற்கு ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் மரியாதைக்குரிய தலைவா’  என வாழ்த்து அட்டை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து வடக்கு வங்காளம் சென்ற ரஜினிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வடக்கு வங்காளத்தில் சூட்டிங் நடைபெறவுள்ள மலைப்பகுதிகளை ரஜினிகாந்த் பார்வையிட்டார். அப்போது ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், “வடக்கு வங்காளத்தில் மலைப்பகுதிகளுக்கு நான் முதல் முறை வருகை தந்துள்ளேன். நான் கண்டிப்பாக இந்த மலைகளில் மீது காதல் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். 

வடக்கு வங்காளத்தில் இன்று சூட்டிங் பணிகளை தொடங்க படக்குழு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இதற்காக ஏற்கெனவே அங்கு 700 திரைப்பட பணியாளர்கள் சென்றுள்ளனர். சுமார் 37 நாட்கள் அங்கு சூட்டிங் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக இரண்டு தனியார் பள்ளிகளில் சூட்டிங் நடைபெறவுள்ளது. வடக்கு வங்களாத்தில் இதுவரை நடைபெற்றுள்ள சூட்டிங்களிலேயே இந்தப் படம் தான் பெரிய பட்ஜெட் படம் என கூறப்படுகிறது. இதற்கு ரன்பீர் கபூர் மற்றும் ப்ரியங்கா சோப்ரா, ஷாரூக் கான் மற்றும் சுஸ்மிதா சன் உள்ளிட்டோர் இணைந்து நடித்த படங்களில் காட்சிகளுக்கு இங்கு சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement