தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை: சென்னையில் தணிந்தது வெப்பம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

சென்னை விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, பூவிருந்தவல்லி, மதுரவாயல், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் விட்டு, விட்டு மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 6வது நாளாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்‌ச்சி அடைந்தனர். 


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் காற்றுடன் கூறிய கன மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பகல் முழுவதும் வெப்பம் சுட்டெரித்த நிலையில், இரவு மிதமான காற்றுடன் மழை பெய்தது. அதே போல் நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நான்கு மணி நேரம் மழை பெய்த‌தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement