4 ஆண்டில் 10 கோடி எரிவாயு இணைப்பு - மோடி பெருமிதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த 4 ஆண்டுகளில் தங்கள் அரசு 10 கோடி எல்பிஜி இணைப்புகளை வழங்கியுள்ளதாகவும் ஆனால் அதற்கு முந்தைய 60 ஆண்டுகளில் 13 கோடி இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Advertisement

மத்திய அரசின் இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் பலன் பெற்ற பெண்களுடன் காணொலி காட்சி முறையில் பிரதமர் உரையாடினார். அப்போது தமது தாய் சமையல் செய்யும் போது விறகுக் கட்டை புகையாலும் வறட்டி புகையாலும் அவதிப்பட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்நிலையில் சமையலறை புகை தொந்தரவு இல்லாமல் இந்நாட்டு பெண்கள் இருக்க வேண்டுமென்பதற்காக இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை தமது அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். சமையல் எரிவாயு வசதி என்பது பணக்காரர்கள், நடுத்தர வர்க்க மக்களுக்காக மட்டுமே என இருந்த நிலையில் தங்கள் அரசு ஏழைகளுக்கும் அதை கொண்டு சென்றுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்

loading...

Advertisement

Advertisement

Advertisement