தனி ஒருவன் டூபிளசிஸால் இறுதிப்போட்டிக்கு சென்ற சி.எஸ்.கே

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹைதராபாத் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.


Advertisement

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிப்போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஹைதராபாத், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.


Advertisement

இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர் டூபிளசிஸ் மட்டும் நிலைத்து ஆட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ரெய்னா மட்டும் 22 (13) ரன்கள் எடுத்தார். இதையடுத்து 8வதாக களமிறங்கிய தாகூர் 5 பந்துகளில் 15 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதிவரை விளையாடிய டூபிளசிஸ் 42 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். கடைசி ஒரு ஓவருக்கு 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற போது, முதல் பந்திலேயே 6 அடித்து டூபிளசிஸ் சென்னை அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டுசென்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement