JUST IN

Advertisement

’சாஹோ’ பிரபாஸுக்கு வில்லனா? மறுக்கிறார் அருண் விஜய்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’சாஹோ’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கவில்லை என்று அருண் விஜய் தெரிவித்தார்.


Advertisement

மணிரத்னத்தின் ’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இதில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதில் தனது போர்ஷனை முடித்துள்ள அருண் விஜய், அடுத்து பிரபாஸ் நடிக்கும் ’சாஹோ’ ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். 


Advertisement

சுஜித் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், எமி ஜாக்‌ஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் உருவாகும் இந்தப் படத்துக்கான பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி அபுதாபியில் நடந்து வருகிறது. இந்த சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் கென்னி பேட்ஸ் அமைக்கிறார். இதன் படப்பிடிப்பில் இப்போது கலந்துகொண்டுள்ள அருண் விஜய், இதில் தான் வில்லனாக நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு அங்கு ஆக்‌ஷன் காட்சிகளின் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ’தடம்’ படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் தான்யா, ஸ்மிருதி, பெப்சி விஜயன், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement