பிரதமர் மோடியின் திட்டத்தை கூறி பெண்களை ஏமாற்றிய டிப்டாப் நபர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஓமலூரில் பிரதமர் மோடி கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி கிராமப்புற பெண்களை ஏமாற்றிய அரியலூர் நபரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.


Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக ஒரு பெண் உட்பட மூன்று டிப்டாப் நபர்கள் ஓமலூர் வந்துள்ளனர். இவர்கள் ஏ.கே.எஸ் அன்னை தெரசா மேன்பவர் சர்வீஸ் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தொண்டு நிறுவனம் நடத்துவதாக கூறியுள்ளனர். இந்த தொண்டு நிறுவனத்திற்கு பிரதமர் மோடி கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கிராமப்பகுதிகளில் கணினி மையங்கள் அமைக்க அனுமதி வழங்கி இருபதாக கூறியுள்ளனர். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி குடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதற்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். 


Advertisement

மேலும், இந்த திட்டத்தில் சேரும் நபர் ஒருவருக்கு 35 ஆயிரம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை நம்பி ஓமலூர் உட்பட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். மேலும், பணம் கொடுத்த போலியாக வேலைக்கான உத்தரவு வழங்கியுள்ளனர். ஆனால், இரண்டு மாதங்கள் முடிந்த நிலையிலும் சம்பளம் வாராததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அனைவருக்கும் காசோலை வழங்கியுள்ளனர். ஆனால், அந்த காசோலையின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்பது தெரிய வந்தது. 

இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பை சேர்ந்த அரியலூர் மாவட்டம் தலுத்தலைமேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வெங்கடேசனுடன் ஊட்டியை சேர்ந்த ரூத் மங்கையர்க்கரசி, சங்கர் ஆகியோரும் சேர்ந்து இந்த அமைப்பை நடத்தி வருவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இவர்களிடம் ஏமாந்த ஓமலூர், சேலம், ஆத்தூர் மற்றும் நாமக்கல் பகுதியை சேர்ந்த சுமார் 25 பேர் புகார் கொடுத்துள்ளனர். அதில், பாரத பிரதமர் மோடி பெயரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், அவர்களிடம் மேற்கொண்டு யாரும் ஏமாறாதவாறு, அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்றும் புகார் கூறினர். புகாரின் மீது வழக்குபதிவு செய்த போலீசார் ஏமாற்றிய அரியலூரை சேர்ந்த வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement
loading...
Related Tags : omalurmodipolicecrimePrime Minister Modiஓமலூர்

Advertisement

Advertisement

Advertisement