ராகுல்காந்தி சென்ற விமானத்தில் கோளாறு: விசாரணை நடத்த கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராகுல்காந்தி சென்ற விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


Advertisement

தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக ராகுல்காந்தி நேற்று டெல்லியிலிருந்து கர்நாடகா சென்றார். அவர் சென்ற விமானம் ஹூபாளி விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு முன் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியபோது திடீரென இடதுபுறம் சாய்ந்தபடியே சென்றது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறைக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.


Advertisement

இதேபோல் கர்நாடக டிஜிபி நீல்மணி என் ராஜூக்கு ராகுல் காந்தியின் உதவியாளர் கௌசல் வித்யார்த்தி எழுதியுள்ள கடிதத்தில், இது இயற்கையானதோ அல்லது பருவநிலையாலோ ஏற்பட்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், விமானம் தரையிறங்கும் போது ராகுல் காந்தி அமைதியாக இருந்ததாகவும், அனைவரும் பத்திரமாக தரையிறங்குவோம் என்று சக பயணிகளிடம் நம்பிக்கையுடன் கூறியதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு மாபெரும் தொழில்நுட்பத் தோல்வி என்றும், இது மிகவும் தீவிரமான விஷயம் என்றும் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement