தோனி சூப்பராக விளாசுகிறார், ஆனால்..? விராத் கோலி விரக்தி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’கடைசி கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது கிரிமினல்தனமானது’ என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோலி சொன்னார்.


Advertisement

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் அபாரமாக ஆடி, 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, ராயுடு மற்றும் தோனியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. ராயுடு, 53 பந்துகளில் 82 ரன்களும் தோனி, 34 பந்துகளில் 70 ரன்களும் விளாசினர். 


Advertisement

இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, புள்ளி பட்டியலில், டாப்பில் இருக்கிறது. 

போட்டிக்கு பின் பேசிய விராத் கோலி, ’இந்தப் போட்டியில் பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் பந்துவீசிய முறை ஏற்றுக்கொள்ள முடியாதது. கடைசி கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது கிரிமினல்தனமானது. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 72 ரன்களுக்கு 4 விக்கெட்டை எதிரணி இழந்த போதும் அந்த அணியை கட்டுப்படுத்தப்பட முடியவில்லை. 200 ரன்களுக்கு மேல் எடுத்தும் வெற்றிபெறவில்லை என்றால் கஷ்டம். இருந்தாலும் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளிக்கிறேன். அவர்களுக்கு போதுமான நம்பிக்கையை அளித்து செயல்படுத்த வைக்க வேண்டும். இந்த பிட்ச் நன்றாக இருந்தது. சுழல் பந்து இந்தப் பிட்சில் நன்றாக எடுபட்டது. இரண்டு அணியிலுமே சில சிறப்பான பேட்டிங் வரிசை இருக்கிறது. அதனால்தான் 200 ரன்கள் வரை எடுக்க முடிந்தது. ராயுடு கடந்த 15 வருடங்களாக விளையாடி வருகிறார். அவர் இளம் வீரர் இல்லை என்றாலும் சிறந்த ஆட்டக்காரர். இந்திய அணிக்கும் அவர் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தோனி உண்மையிலேயே அசத்தினார். இந்த ஐபிஎல்-லில் அவர் பந்தை விளாசும் விதம் அருமையாக இருக்கிறது. ஆனால், எங்களுக்கு எதிராக அவர் அடித்ததைத்தான் பார்க்க முடியவில்லை’ என்றார். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement