[X] Close >

ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

MK-Stalin-condemn-tn-governor

தமிழகத்தில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு சவால்விடும் ஆரோக்கியமற்ற முன்மாதிரிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உருவாக்கி வருவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

ஆளுநரின் செயல்பாட்டிற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் ஆட்சி திருப்திகரமாக நடைபெறுவதாகவும்  ஆளுநர் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

குட்கா முறைகேடு, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா போன்ற விவகாரங்கள் குறித்து மக்கள் நன்கு அறிந்துள்ள நிலையில் ஆளுநரின் கூற்று உள்நோக்கம் கொண்டதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து பன்வாரிலால் மாநில அரசின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் குறித்து குறிப்பிட்டள்ள ஸ்டாலின் இந்நேரத்தில் மாநில அரசிற்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளதும், ஆய்வுப் பணிகளை மே மாதம் வரை ஒத்திவைத்திருப்பதாக அறிவித்திருப்பதும் பல சந்தேகங்களை எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளித்துள்ள மனுக்களை தூசி தட்டினாலே அதிமுக ஆட்சியின் கொள்கைகளை அறிந்து கொள்ளலாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாகி வரும் சூழலில், ஆளுநரின் கருத்து ஜனநாயக நெறிமுறைகளுக்கு சவால் விடுவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆளுநர் ஆரோக்கியமற்ற சில முன்மாதிரிகளை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் திமுக சார்பில் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close