[X] Close >

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்: விடுமுறையில் ஜாலி கொண்டாட்டம்..!

People-crowd-in-hogenakkal

கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பரிசல் பயணம் செய்யும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


Advertisement

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக மழையில்லாத காரணத்தினால் காவிரியாற்றில் கடந்த சில மாதங்களாக நீர்வரத்து 200 கன அடியாக சரிந்து, வேறும் பாறைகளாக காட்சியளித்தது. இதனால் சுற்றுலாதளமான ஒகேனக்கல்லிலும் பயணிகள் வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முதல் காவரியாற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக 200 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 1000 கன அடியாக அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து நேற்று மீண்டும் பெய்த மழை காரணமாக நீர்வரத்து மேலும் அதிகரித்து 1500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.


Advertisement

இதனால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி கிடந்த ஒகேனக்கல்லுக்கு, இன்று கோடை விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், மெயினருவி மற்றும் பரிசல் பயணம் செய்யும் இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனிடையே சுற்றுலா பயணிகள் நலன் கருதி, தமிழக அரசு கூடுதலாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட சிறு தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தகவல்கள்: சே.விவேகானந்தன்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close