மத்தியப் பிரதேசத்தில் 8 மாத குழந்தை பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில இந்தூரை சேர்ந்த பலூன் வியாபாரி தனது மனைவி மற்றும் 8 மாத மகளுடன் சாலையில் படுத்து உறங்கியுள்ளார். வண்ணமயமான பலூன்களை விற்றாலும் அவரது வாழ்க்கை வண்ணமயமாக இல்லை. குடித்தனம் செய்ய வீடு இல்லாததால் சாலையில் கிடைக்கும் இடங்களில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு தனது மகள் மற்றும் மனைவியுடன் ராஜ்வாடா ஃபோர்ட் பகுதியில் உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது தனது 8 மாத குழந்தை காணவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கடை நடத்தும் ஒருவர் தனது கடையின் கீழ்த்தளத்தில் குழந்தை சடலமாக இருப்பதைக் கண்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பலூன் வியாபாரியின் குழந்தை என தெரிய வந்தது. குழந்தையின் உடலில் காயம் இருந்தது இதன் மூலம் பாலியல் வன்புணர்வுக்கு குழந்தை ஆளாகியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சுமார் காலை 4.45 மணிக்கு ஒரு வாலிபர் குழந்தையை தனது தோளில் தூக்கிக்கொண்டு கடையின் கீழ்தளத்திற்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்ததில் அந்த இளைஞர் இரவில் பலூன் வியாபாரியின் உறங்கிய இடத்திற்கு அருகில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரின் பெயர் சுனில் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, சாலை ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை அந்த குடும்பத்தினருக்கு தெரியாமல் சுனில் என்ற இளைஞர் தூக்கிச் சென்றுள்ளார். அவர்கள் இருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடையின் கீழ்த்தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.கடைக்காரர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டோம்.குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தது.குழந்தை மேல் இருந்து தூக்கி விசப்பட்டிருக்கலாம்.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக குழந்தை உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!