மனைவியை 11 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த கணவர்

Man-kills-second-wife--cuts-her-into-pieces

சூரத்தை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் தனது இரண்டாவது மனைவியை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.


Advertisement

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் ஷானவாஸ். இவர் அப்பகுதியில்  மளிகைக்கடை நடத்தி வருகிறார். தரைதளத்தில் கடையும் அதற்கு மேல் தளத்தில் இவரது இல்லமும் உள்ளது. ஏற்கனவே இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் சுலேகா என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த சுலேகாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். பின்னர் இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தியுள்ளார்.

ஷானவாஸின் முதல் மனைவிக்கும் சுலேகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள உத்னா கால்வாய் அருகே ஷானவாஸ் பைகளில் எதையோ மறைத்து சந்தேகத்துக்கு இடமான முறையில் சென்றுள்ளார். இதனைக்கண்ட சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஷானவாஸிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் வைத்திருந்த பையில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட கை, மற்றும் கால்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர்,அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் தனது இரண்டாவது மனைவி சுலேகாவை படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சடலத்தை மறைக்க 11 துண்டுகளாக வெட்டியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் ஷானாவாஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஷானவாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.


Advertisement


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement