[X] Close >

ஸ்டாலின் புதிய போஸ்ட் கார்டு போராட்டம்

DMK-Working-President-MKStalin-Postcard-Protest

இரண்டு குழுக்களாக பிரிந்து காவிரி உரிமை மீட்புப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


Advertisement

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் தோழமைக்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா, காதர் உசேன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 2‌ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலாவதாக அறவழியில் போராட்டம் நடத்திவரும் அனைத்துக்கட்சியினருக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தும், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் ஓரணியில் நின்று நேற்றைய முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற வைத்ததற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த காலஅவகாசம் கேட்கும் மனுவை திரும்பப்பெற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு நடைபயணம் இரண்டு குழுக்களாகப் பிரித்து நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Advertisement

இந்நிலையில் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை தொடங்கவிருக்கும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி வழிநெடுக இருக்கின்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடத்தில் அஞ்சலட்டைகளில் கையெழுத்து பெற்று மேதகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நம் கோரிக்கையை வலியுறுத்துவோம்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் பயணத்திற்காக நடப்போம் - குரல் கொடுப்போம் - மீட்டெடுப்போம்! என்ற வாசகத்தையும் உருவாக்கியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close