காயம் காரணமாக இந்திய தொடரிலிருந்து விலகியுள்ள, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கு பதிலாக, பேட் கம்மிங்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியில் இருந்து அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வலதுகால் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகினார். இவருக்குப் பதிலாக வேகப்பந்து வீசாளர் பேட் கம்மிங்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை ஒரு தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் 1-1 என்று சமநிலையில் இருக்கும் சூழ்நிலையில், பேட் கம்மிங்ஸ் சிறப்பாகப் பந்து வீசுவார் என ஆஸ்திரேலியா அணி எதிர்ப்பார்க்கிறது.
ஸ்டார்க், இந்தத் தொடரில் புஜாரா, கோலி உட்பட சில முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"ஈம சடங்கு நிகழ்ச்சிக்காவது அனுமதி கொடுங்க” - தெருக்கூத்துக் கலைஞர்கள் கோரிக்கை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?