திமுக தலைவர் கருணாநிதியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார்.
இதற்காக ஏப்ரல் 11 ஆம் தேதி மம்தா சென்னை வருகிறார். ஏப்ரல் 11 அல்லது 12 ஆம் தேதிகளில் கருணாநிதியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழியை டெல்லியில் மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்பொழுது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்று மம்தா கூறினார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ள நிலையில், கருணாநிதி உடனான அவரது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முதலில் அழைப்பு விடுத்தார். அப்பொழுது முதல் நபராக சந்திரசேகர் ராவுக்கு மம்தா ஆதரவு தெரிவித்ததோடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார்.
திமுக தற்போது வரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கருணாநிதியை மம்தா பானர்ஜி சந்திப்பது எத்தகையை மாற்றங்களை விளைவிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேபோல், புதிதாக கட்சி தொடங்கியுள்ள கமல் ஹாசன் அரவிந்த் கெஜ்ரிவால், பினராய் விஜயன் ஆகிய தலைவர்களை சந்தித்தார். அதேபோல், கொல்கத்தா சென்ற போது, மம்தா பானர்ஜியையும் சந்தித்தார். அதேபோல், கமல்ஹாசனையும் மம்தா சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
Loading More post
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
’’பல புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளியுங்கள்” - பிரதமருக்கு சோனியா கடிதம்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!