தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் மலையேறும் பயிற்சி மற்றும் வனத்திற்குள் முகாம் அமைத்தல் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளின் மகிழ்விப்பு திட்டங்கள் அனைத்தும் 18 நாட்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
குரங்கிணி காட்டுத்தீ விபத்தை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் செல்ல விதித்திருந்த தாற்காலிக தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் போடி குரங்கிணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 20- க்கும் அதிகமானோர் பேர் பலியாகினர். இந்த துயர நிகழ்வை தொடர்ந்து, கேரள வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனையில், கேரளாவின் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து வனப்பகுதிகளிலும் மலையேறும் பயிற்சிக்கு தாற்காலிக தடை விதிக்கப்பட்டது.
கேரள அரசின் தடை உத்தரவை அடுத்து கடந்த மார்ச் 12ம் தேதி முதல் முதல் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் ”ட்ரெக்கிங்க்” எனும் மலையேறும் பயிற்சி, “ஜங்கிள் கேம்ப்” எனும் வனத்திற்குள் முகாம் அமைத்தல், “டைகர் ட்ரையல்”, “பாம்பூ ராஃப்டிங்”, “புக் மார்க் ட்ரையல்” உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு மகிழ்விப்பு திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம் வனங்களுக்குள் கன மழை பெய்து இதமான சூழல் நிலவுவதால் இந்த மகிழ்விப்பு திட்டங்கள் இன்று முதல் துவக்கப்படுவதாக புலிகள் காப்பக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள், 2,500 ரூபாய் கட்டணத்தில் வனத்திற்குள் மலையேறும் பயிற்சி, நான்காயிரம் ரூபாய் கட்டணத்தில் வனத்திற்குள் இரவு முகாமிட்டு தங்கி வரும் வசதி எனத்துவங்கி 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வரை சுற்றுலா பயணிகளுக்கான திட்டங்கள் உள்ளன. தேக்கடி வனத்தின் ரம்மிய அழகு, கீச்சொலிக்கும் பறவைகள், வன விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள், நீரோடைகள் என இயற்கை எழிலை ரசித்து அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இன்று முதல் அவர்களின் ஆசைகான திட்டங்கள் அனைத்தும் 18 நாட்களுக்கு பின் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன.
தேக்கடி வனத்திற்குள் மலையேறும் பயிற்சி மற்றும் வனத்திற்குள்ளான முகாம் உள்ளிட்ட அனைத்து திட்டங்கள் மூலம் செல்லும் ஏழு பேர் கொண்ட குழுவிற்கு, புலிகள் காப்பக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர், ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களில் இருவர், இரு வனத்துறை பணியாளர் என ஐந்து பேர் வாழிகாட்டியாகவும், பாதுகாப்பிற்காகவும் செல்வது தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நெறிமுறைகளாக உள்ளது.
Loading More post
முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள்
கங்காரு பொம்மை வடிவில் உருவாக்கப்பட்டிருந்த கேக்கை வெட்ட மறுத்த ரஹானே!
காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விபத்துகளும் மரணங்களும்
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’