விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


ஜிஎஸ்எல்வி எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து மார்ச் 29 ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி எஃப்08 ராக்கெட் சரியாக மாலை 4.56 மணிக்கு ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளை சுமந்து விண்ணில் சீறிப்பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

எதற்காக ஜிசாட் 6 ஏ: ஜிசாட் 6 ஏ என்ற இந்த அதிநவீன செயற்கைக்கோளில் தகவல்தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்கான 24 சி-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், 6 விரிவாக்கப்பட்ட எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள்  பொருத்தப்பட்டுள்ளன. இந்தச் செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள்.
6000 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரிகள் அத்துடன் கியூ பேண்ட்களின் சேவையை வலுப்படுத்துவதற்காக நவீன சக்தி கொண்ட தொலைத்தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் இணைக்கப்பட்டு அதிநவீன சக்தி கொண்டதாக செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் முறையில் தகவல் சேகரித்தல், ஆபத்தான காலங்களில் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களில் விரிவான பாதுகாப்பு, தேடல் மற்றும் மீட்பு சேவைகளுக்கு இந்த செயற்கைக்கோள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement