மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து தப்பிக்க ஹனுமன் மந்திரங்களை சொல்ல வேண்டும் என்று விவசாயிகளுக்கு பாஜக தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், விளைந்த பயிர்கள் மழையில் கருகி நாசமாகி வருகின்றன. பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், மேற்கு வங்காளம், சிக்கிம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், வடக்கு ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கிழக்கு மத்திய பிரதேசம், விதர்பா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் புயல் பாதிப்பு உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்க ஹனுமன் மந்திரங்களை சொல்ல வேண்டும் என்று மத்திய பிரதேச பாஜக தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் சக்ஸேனா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு கிராமத்திலும் தினமும் ஒரு மணி நேரம் ஹனுமன் மந்திரத்தை உச்சரித்தால் இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். அதேபோல், இளைஞர்களும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹனுமன் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இதுஒருபுறம் இருக்க, இதுகுறித்து மத்திய பிரதேச விவசாயத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண பட்டிதார் கூறுகையில், “ஹனுமன் மந்திரங்களை ஒருவர் உச்சரிக்க விரும்பினால் அதில் தவறில்லை. அது அவர்களுடைய மத நம்பிக்கை” என்றார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்