சென்னை ரயில் நிலையத்தில் மோதல்; அரிவாள் வெட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். அதில், ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.


Advertisement

சென்னை சிந்தாரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையத்தில் இருதரப்பு கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருந்த மாணவர்கள் ஆயுதங்கள் மூலமும் தாக்கிக்கொண்டனர். அப்போது ஒரு மாணவருக்கு சரமாரியாக அரிவாள்வெட்டு விழுந்தது. அதனைபார்த்த பயணிகள் அலறியடித்தப்படி ஓடினர். அதன்பின்னரும் ஆத்திரம் தீராமல் மாணவர்கள் மோதிக்கொண்டனர்.

ரயில்வே காவல்துறையினர் வருவதற்குள், அங்கிருந்து மாணவர்கள் தப்பியோடினர். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் எந்தக் கல்லூரியைச் ‌சேர்ந்தவர்கள், எதற்காக தாக்கிக்கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிந்தாதிரிப்பேட்டை ரயில்நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement