‘சென்னை சீனியர் கிங்ஸ்’ - சிஎஸ்கேவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில் சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 


Advertisement

‌நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா தக்க வைக்கப்பட்ட நிலையில் மற்ற வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை அணி பங்கேற்றது. சென்னை அணிக்காக, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், பிராவோ, டுபிளிசிஸ், கேதர் ஜாதவ், சுரேஷ் ரெய்னா, ராயுடு, கரன் சர்மா உள்ளிட்டோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். 

சென்னை அணியில் தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் 30 வயதை கடந்தவர்கள். குறிப்பாக இம்ரான் தஹிர்-க்கு 38 வயது. ஹர்பஜன் சிங் (37), தோனி (36) வாட்சன் (36). மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் வீரர் அஸ்வின் எடுக்கப்படவில்லை. 30 வயதை கடந்த வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாக அல்லது சென்னை சீனியர் கிங்ஸ் அணியா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Advertisement

          

            

 


Advertisement

          

சீனியர் என்பதற்காக புதுப்பேட்டை படத்தில் இருந்து பாலா சிங் படத்தையும், திரிஷாவை குறிப்பிட்டும் சிலர் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். 

          

          

சென்னை சூப்பர் கிங்ஸை கலாய்த்து ஒரு புறம் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வர, மற்றொரு புறம் சிஎஸ்கே-வுக்கு ஆதரவாக மீம்ஸ்களை ரசிகர்கள் தெறிக்கவிடுகிறார்கள். தல தோனி ஒருவர் போதும்..வயது முக்கியமில்ல திறமை தான் முக்கியம்..என்று சென்னை சூப்பர் கிங்ஸை தூக்கிபிடிக்கிறார்கள்.

          

        

          

          

loading...

Advertisement

Advertisement

Advertisement