பத்திரப்பதிவு தடை.. அங்கீகாரம் இல்லா நிலங்களுக்குத்தான்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பத்திரப்பதிவுக்கான தடை அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.


Advertisement

விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும், அங்கீரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்து செப்டம்பர் 9 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், பலர் தகாத வார்த்தையில் பேசுவதாகவும், பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில், ஏற்கனவே இந்த வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் முறையிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகளிடம் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.


Advertisement

யானை ராஜேந்திரனின் கோரிக்கையை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தலைமை நீதிபதி அனுமதியளித்தார். அப்போது, பத்திரப்பதிவு தடை உத்தரவானது ஒட்டுமொத்தமான தடை கிடையாது என்றும், அங்கீகாரமற்ற வீட்டுமனைகள், நிலங்களுக்கு மட்டுமே இந்த தடை உத்தரவு பொருந்தும் எனவும் தலைமை நீதிபதி விளக்கமளித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement