அண்ணாசாலையில் கார் கவிழ்ந்து ஒருவர் பலி: 7 பேர் படுகாயம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அண்ணாசாலையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Advertisement

பெரம்பூரைச் சேர்ந்த சுனில் உள்ளிட்ட 8 பேர், ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள ஒரு கடைக்கு நேற்று நள்ளிரவு வந்தனர். அப்போது வேகமாக வந்த கார், மேம்பாலம் அருகேயுள்ள சர்ச் பார்க் பள்ளி முன்பு உள்ள நடைமேடை மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பியூஸ் என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், 2 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement