[X] Close >

யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

Girl-dies-after-hitting-elephant

கோவை மாவட்டம் சாமிசெட்டிபாளையத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.. 


Advertisement

மேட்டுப்பாளையத்தின் பிரதான சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தேக்கம்பட்டி சாலையில் அதிகாலை முதல் சுற்றித்திரிந்த காட்டு யானை, அவ்வழியே சென்ற வாகனங்களை துரத்தி தாக்க முற்பட்டது. அதில், அச்சத்துடன் தங்களது வாகனங்களை கீழே போட்டுவிட்டு வாகன ஓட்டிகள் தப்பிச் சென்றனர். அப்போது, சிறிய ரக டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தையும் யானை சேதப்படுத்தியது. மிகவும் கோபத்துடன் காணப்பட்ட அந்த காட்டு யானை பொதுமக்களுக்கு அச்சம் தரும், வகையில் குரல்களை எழுப்பியது. 

பின்பு தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். அப்போது நரசிம்மநாயக்கன்பாளையம், தென்றல் நகர், கீரநத்தம் பகுதிகளில் காட்டுயானை நுழைந்தது. அதனையடுத்து அங்கிருந்து துரத்தி விடப்பட்ட அந்த யானை சாமிசெட்டிபாளையத்தில் இரண்டு பெண்களை தாக்கியது. இதில் ராமாத்தாள் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மற்றொருவர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 4 யானைகள் கொண்ட கூட்டத்தில் ஒரு யானை மட்டும் தனியாக பிரிந்து இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் காட்டுயானையை முழுவதுமாக விரட்டும் வரை பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.  
 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close