தமிழக போக்குவரத்துத்துறையின் 8 கோட்டங்களை இணைக்கத் திட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக போக்குவரத்துத்துறையில் செலவீனத்தை குறைக்கும் நடவடிக்கையாக 8 கோட்டங்களையும் இணைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்டுதோறும் 700 கோடி ரூபாய் செலவீனத்தை குறைக்க முடியும் என அதிகாரிகள் மதிப்பீட்டுள்ளனர்.


Advertisement

தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் கோவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் என 8 கோட்டங்கள் உள்ளன. இதில் திருநெல்வேலி கோட்டத்தில் மட்டும் 2016-17 ஆம் ஆண்டில் 671 கோடி ரூபாய் என குறைவான வருவாய் கிடைத்துள்ளது. ஆகையால் இவற்றை ஒன்றாகவோ அல்லது 4 கோட்டங்களாகவோ மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு, முதல்கட்டமாக திருநெல்வேலி, மதுரை ஆகியவற்றை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவுள்ளது. இது சாத்தியமானால் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement