மாயமான நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணி நிறுத்தம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அர்ஜென்டினாவில் கடந்த 15 நாட்களுக்கு முன் மாயமா‌ன நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகளை‌ அந்நாட்டு கடற்படை நிறுத்திக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

அட்லாண்டிக் பெருங்கடலில் 44 வீரர்களுடன் பயணித்த ஆரா சன் குவான் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனால் காணாமல் போன கப்பலை தேடும் பணி தீவிரம் அடைந்தது. ஆனால் தேடல் பணியில் எந்தவித முன்னேற்றமும் காணப்படாததால் மாயமா‌ன நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அர்ஜென்டினா கடற்படை அறிவித்துள்ளது. 

மேலும் கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என கருதப்படுவதால், தேடும் பணிகளை நிறுத்திக் கொள்வதாகவும் அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. இதனால் சிப்பந்திகளின் குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிருடன் கரை திரும்புவதற்காக தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement