வடகொரியாவை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு தென்கொரியா அழைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியா, உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.


Advertisement

இதுகுறித்து சியோலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் நோ க்யூ டக், வடகொரியா நடத்தி வரும் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் கொரிய தீபகற்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வடகொரியா இனியும் நடந்துக் கொள்ளக் கூடாது. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நாடுகள் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டும்.

இதேபோல் ஐ.நா.வும் வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனேியோ குத்தேரஸ் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை, வடகொரியா முழுமையாக மீறிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement