JUST IN

Advertisement

ஹெச்.ராஜா கேள்விக்கு பதில் சொல்ல நேரமில்லை: கனிமொழி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹெச்.ராஜாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தமிழகத்தில் யாருக்கும் நேரமில்லை என திமுக எம்.பி கனிமொழி பதிலளித்துள்ளார்.


Advertisement

சென்னையை அடுத்த எண்ணூர் கழிமுகத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். கழிமுகப் பகுதிகளை பார்வையிட்ட அவர், அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் எண்ணூர் நிலக்கரி கிடங்கையும் கனிமொழி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, எண்ணூர் கழிமுக பகுதியில் உள்ள நிலக்கரி சாம்பல் கழிவால் மீனவ மக்களுக்கு ஆபத்து என்றார். சாம்பல் கழிவுகளால் இறால் மீன்களும் அழிந்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

8 ஆயிரம் ஏக்கர் கழிமுகப் பகுதியில், ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது இந்து மதத்தை அழிக்க வந்தது தான் திராவிடர் கழகம் என ஹெச்.ராஜா கூறியது பற்றி கேட்டபோது, ஹெச்.ராஜா கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல தமிழகத்தில் யாருக்கும் நேரமில்லை என கனிமொழி பதிலளித்தார்.


Advertisement


 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement