பிலிப்பைன்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நம்பிக்கை இருந்தால் எதையும் ஜெயிக்கலாம் என்று கூறினார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 31-வது ஆசியான் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், மியான்மர், புருனே, பிலிப்பைன்ஸ் உள்பட கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியுடன் சேர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடியும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பிலிப்பைன்ஸ் வாழ் இந்தியர்களிடம் இந்திய அரசின் செயல்பாடுகளை அவர் விளக்கினார். அத்துடன் இந்தியாவில் அனைத்தையும் உலகத் தரத்துக்கு மாற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக கூறினார். மேலும் நம்பிக்கை இருந்தால் எதையும் ஜெயிக்கலாம் என்பதை இந்திய அரசு நிரூபித்துக் காட்டியுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?