தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மாலை 4 மணிக்கு பதவியேற்க இருக்கிறார்.
இந்த தகவலை அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய தலைமுறையிடம் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மூன்றாவது முறையாக இன்று சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிச்சாமி கடந்த 14ம் தேதி கொடுத்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தின் அடிப்படையில், அவரை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். பதவியேற்ற பின்னர் 15 நாட்களில் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கூவத்தூரில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு