புதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்கு சந்தை 

Indian-stock-market-hit-new-highs

இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 33,295 புள்ளிகளைத் தொட்டுள்ளது.


Advertisement

இன்றைய வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமான 33 ஆயிரத்து 295 என்ற புள்ளிகளைத் தொட்டது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 46 புள்ளிகள் அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக 10 ஆயிரத்து 369 புள்ளிகளை எட்டி சாதனை படைத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், நுகர் பொருட்கள், உட்கட்டமைப்பு, வாகனம் உள்ளிட்ட துறைகளின் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. இந்திய பங்கு சந்தையின் இந்த புதிய உச்சத்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement