தற்கொலைக்கு முன் கவின்கலைக் கல்லூரி மாணவரின் உருக்கமான வாக்குமூலம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை கவின்கலைக் கல்லூரியின் துறைத் தலைவர் ரவிக்குமார் கொடுத்த நெருக்கடியே, தமது தற்கொலைக்கு காரணம் என மாணவர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக பதிவு செய்த வீடியோவில் இதனைக் கூறியுள்ளார். மாணவர் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி நேற்று முதல் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement

வேலூர் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்த பிரகாஷ். இவர் ஓவியம் மற்றும் சிலை செய்வதின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னை தனியார் கலை கல்லூரியில் சேர்ந்து 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். பிரகாஷ், தனது எச்ஓடி தனக்கு டார்ச்சர் கொடுத்ததாகவும், தான் கனவாக எண்ணி வடிவமைத்து வந்த சிலையை செய்ய விடாமல் தடுத்ததால் மனமுடைந்ததாகவும் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது நண்பர்களுக்கு ஒரு வீடியோ ஒன்றையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருந்தார்.

அந்த வீடியோவில், "துறைத் தலைவர் ரவிக்குமார் எனக்கு மிகவும் நெருக்கடி கொடுத்து வருகிறார். அவர் என்னை எந்த வேலையையும் முறையாக செய்ய விடுவதில்லை. அவர் மத ரீதியாக என்னிடம் பாகுபாடு பார்க்கிறார். தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று என்னிடம் அறிவுறுத்தினார். என் தன்மானத்தை விட்டுக் கொடுத்துவிட்டு படிப்பை தொடர முடியாது. மிகுந்த மன உளைச்சலால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். அனைவரையும் கடைசியாக பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்" என்று பிரகாஷ் உருக்கமாக பேசியுள்ளார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement