[X] Close >

காதல் திருமணம் செய்த பெண் ஒரே மாதத்தில் மரணம்

Pallavaram-love-marriages-girl-death-in-one-month

பல்லாவரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ஒரே மாதத்தில் பெண் இறந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

சென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த பெண் ஷாகிரா. இவரும், கார்த்திக் என்பவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ஷாகிராவின் வீட்டாருக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லாததால், இருவரையும் பிரித்து விடும்படி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்பொழுது ஷாகிரா பெற்றோருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும், கார்த்திக்குடன் செல்வதாகவும் காவல் நிலையத்தில் கடிதம் மூலம் தெரிவித்து சென்றுவிட்டார். இந்நிலையில் ஷாகிரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, தன்னுடைய மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறினர். அத்துடன் மகள் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close