ரயிலில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட மேலும் 2 மாணவர்கள் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையை அடுத்த நெமிலிச்சேரியில் பொதுமக்களை கத்தியுடன் வந்து அச்சுறுத்திய விவகாரத்தில் மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

கடந்த 6-ஆம் தேதி ரயிலில் வந்த மாணவர்கள் சிலர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் அமர்க்களம் செய்தனர். நெமிலிச்சேரி ரயில் நிலையத்திலேயே பட்டாசு வெடித்தும், கத்தியை காட்டியும் ரகளை செய்தனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 மாணவர்களும், தங்கள் செயலுக்கு கண்ணீர் விட்டு கதறி அழுதபடி மன்னிப்பு கோரினர். இனி வாழ்நாளில் ரயிலிலேயே ஏற மாட்டோம் எனவும், இதுபோன்ற தவறுகளை ஒருபோதும் செய்யமாட்டோம் எனவும் கூறினர். இந்நிலையில் நேற்று மேலும் இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement