'கொசு இல்லா இல்லம்' திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

சென்னை ராயப்பேட்டையில் 'கொசு இல்லா இல்லம்' என்ற திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்‌ தொடங்கி வைத்தார். 

சென்னை ராயப்பேட்டை பகுதியில் கொசு இல்லா இல்லம் மற்றும் நோயற்ற இல்லம் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர்‌ தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அப்ப‌குதி மக்களுக்கு நிலவேம்பு குடிநீரை அமைச்சர் விஜயபாஸ்கர் விநியோகித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னை மாநகராட்சியில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் சுகாதாரத்தை பேண பல்வேறு துறையினரை முடுக்கி விட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் மருத்துவர்களை அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement