கணவன் கண்முன்னே மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் அருகே உள்ள பெசரா கிராமத்துக்கு கணவன், மனைவி மற்றும் அவர்கள் 2 வயது மகன் ஆகியோர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையின் அருகே காரில் நின்ற 4 பேர், பைக்கை மறித்தனர். அருகிலுள்ள கங்கையாற்றின் பாலம் உடைந்துவிட்டது, வேறு வழியாகச் செல்லுங்கள் என்றனர். இதை நம்பி, அந்தக் குடும்பம் பைக்கை திரும்பியது. அப்போது பைக்கை இழுத்து நிறுத்திய அவர்கள், கணவனை அடித்து உதைத்தனர். 2 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அந்தப் பெண்ணை அருகிலுள்ள கரும்புத் தோட்டத்துக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் தப்பியோடிவிட்டனர். அந்த வழியாக சென்ற விவசாயிடம் அந்தப் பெண் உதவிக் கேட்டதை அடுத்து அவர் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். போபால் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?