ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் தொடர்வதாக 75 நாட்கள் தெரிவிக்கப்பட்டது பதவி ஆசைக்காகவா என அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையில் வெளியான ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை ஆவணத்தை சுட்டிக்காட்டி அடுக்கடுக்கான கேள்விகளை ஸ்டாலின் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசட் பிளஸ் உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்த ஜெயலலிதாவின் வாகன வரிசையில் ஆம்புலன்ஸ் இல்லையா?. ஆம்புலன்ஸ் இருந்திருந்தால் அதில் ஜெயலலிதாவை அழைத்துச் செல்லாமல் தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றது ஏன்?. சர்க்கரை அளவு கடுமையாக உயர்ந்து, இதயத்துடிப்பு அதிகரித்து, சுவாசிப்பு வெகுவாக குறைந்து மயக்கமாக ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்ட நிலையில், வெறுமனே காய்ச்சல் என மருத்துவ அறிக்கை வெளியாக என்ன காரணம்?. யாருடைய நிர்பந்தத்தால் இது நிகழ்ந்தது. அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதா காவிரிப் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் விவாதித்ததாக அரசு அறிக்கை வெளியிட்டது எப்படி?
மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை என்ற அமைச்சரின் பேச்சுக்கு ஆளுநர் மாளிகையும் மத்திய அமைச்சர்களும் தரும் பதில் என்ன?. இதுபோன்ற சந்தேகங்களின் பின்னணியில் ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட விசாரணை ஆணையத்தால் முழு உண்மையை வெளிக்கொணர முடியாது என்றும், சிபிஐ விசாரணை மூலமே பெருமளவு உண்மைகளை கண்டறிய முடியும். ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் தொடர்வதாக 75 நாட்கள் தெரிவிக்கப்பட்டது பதவி ஆசைக்காகவா என அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் கேள்வி எழுப்புவதாக என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்