ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நன்றி செலுத்தும் விதமாக மோகன்லால் நடனமாடும் புதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது.
மோகன்லால் நடிப்பில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என்ற மலையாள படத்தில், `எண்டம்மையிட ஜிமிக்கி கம்மல்' என்ற பாடல் இடம்பெற்றது. இதில் கடைசி இரு காட்சியில் மட்டுமே மோகன்லால் தோன்றியிருப்பார்.
அண்மையில், கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாப்பட்டது. கொச்சியில் உள்ள 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்' கல்வி நிறுவனத்தின் மாணவிகள், ஆசிரியர்கள் `ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடியதுடன் அதன் வீடியோவை யு டியூப்பில் பதிவேற்றியிருந்தனர்.
அப்பாடல் யு டியூப், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் வைரலானது. கல்லூரி பெண்கள், ஆசிரியர்கள் நடனமாடிய இப்பாடல் 16 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும், படத்தில் இடம்பெற்ற ஒர்ஜினல் பாடல் 22 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்நிலையில், இப்பாடலைக் கொண்டாடும் மக்களுக்கும், வைரலாக்கிய ரசிகர்களுக்கும் நன்றி கூறும் நோக்கில் இந்த புதிய பாடலைப் பதிவேற்றியுள்ளனர். இப்புதிய பாடலும் யு டியூப்பில் இப்போது வைரலாகி வருகிறது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!