பேரறிவாளனின் பரோலை அக்டோபர் 24 வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ராஜூவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவரது குடும்பத்தினர் பரோல் கேட்டிருந்தனர். அதற்கு அனுமதி கிடைத்ததால் அவர் பரோலில் வெளியே வந்திருந்தார். அவரது பரோல் காலம் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் அவரது தாயார் அற்புதம்மாள் சில தினங்கள் முன்பு முதல்வர் பழனிசாமியை சந்தித்து மேலும் நீட்டிப்பு கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று வரும் அக்டோபர் 24 வரை பரோல் வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் அற்புதம்மாள்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு