JUST IN

Advertisement

ஸ்டாலினிடம் ஆட்சியை ஒப்படைக்க பார்க்கிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தயவில் 35 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் ஆட்சியை‌ ஸ்டாலினிடம் ஒப்படைக்க திட்டமிடுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். 


Advertisement

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக மனு அளித்தனர். இதனையடுத்து கருணாஸ் உள்ளிட்ட மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு ஆதரவாக ஆளுநரிடம் மனு அளித்தனர். 

இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கருத்தில் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். 


Advertisement

இந்த நிலையில், தருமபுரியில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கான பந்தக் கால் நடும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துரோகிகள் குள்ளநரித்தனம் செய்வதாக சாடினார்.

இதனிடையே, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆளுநரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement