உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா?- முதல்வர் பழனிசாமி பேட்டி

Tamilnadu-cm-edappadi-palanisamy-press-meet

உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து முடிவு செய்யப்பட்டும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 


Advertisement

அதிமுக உள்ளாட்சி தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? என அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வந்தது. அந்த சர்ச்சைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றிப்புள்ளி வைத்திருக்கிறார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று ‘பாஜகவுடன் கூட்டணி வைப்பத்தில் தவறில்லை’என்று கூறியிருந்தார். மீண்டும் விடாமல் செய்தியாளர்கள் ‘அப்பொழுது கூட்டணி உறுதியாகிவிட்டதா?’என்ற கேள்வியை எழுப்பினர். "அதை நான் முடிவு செய்ய முடியாது. மூத்த கட்சியின் தலைவர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தான் கூடி முடிவெடுப்பார்கள்” என்றார். இந்நிலையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி "பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு எடுக்கப்படும். எனவும் 134 எம்.எல்.ஏக்களுடன் அதிமுக அரசு பெரும்பான்மையுடன் உள்ளது” என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறினார். 

"கடந்த காலங்களில் இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. அதுபோல் திமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. பாஜக அமைச்சரவையிலும் திமுக இடம் பெற்று இருந்தது. அதனால் இப்போது பாஜகவுடன் சேர்ந்தால் என்ன தவறு இருக்கிறது. அன்றைக்கு திமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தபோது திமுகவுக்கு இனித்தது. இன்று பாஜக கூட்டணி கசக்கிறதா? தேர்தல் தேதி அறிவித்தபின்பு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement